வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2021 (17:40 IST)

ராம் கோபால் வர்மாவின் படத்தை நிராகரித்த தணிக்கை குழுவினர் !

இந்தியாவில் உள்ள இயக்குநர்களில் பிரபலமானவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் அவ்வப்போது தெரிவிக்கு கருத்துகள் பெரும் சர்ச்சைகளை உருவாக்கும். ஆனால் அவற்றைப் பற்றிக் கவலையோ வருத்தமோ தெரிவிக்கமால் தனது அடுத்த கட்ட படத்திற்குச் சென்றுவிடுவார்.

கடந்த வருடம் சசிகலா குறிந்த படம் இயக்கப்போவதாகக் கூறினார்.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் பணிக்குச் சென்றுவிட்டு, ஸ்கூட்டியில் தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த ஒரு கால்நடை மருத்துவரை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்து ,.மனிதநேயமின்றி எரித்துகொன்றனர். இவர்கள் 5 பேரும் அதே இடத்தில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் ராம்கோபால் வர்மா திஷா என்கவுண்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால், இப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென்று, திஷாவின் தந்தை ஏற்கனவே நீதியமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ராம் கோபால் வர்மாவிற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திஷா என்கவுண்டர் படத்தை தணிக்கைக் குழுவிற்கு சென்சார் சான்றிதழுக்கான அனுப்பினார் ராம் கோபால் வர்மா.

இப்படத்தில், பாலியல் வன்கொடுமைக் காட்சியே அப்படியே எடுத்திருப்பதாகக் கூறி தணிக்கை அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், அடுத்து, ரிவைசிங் கமிட்டிக்கு இப்படத்தை ராம்கோபால் வர்மா அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.