செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (19:38 IST)

ஒருவர் மீது ஒருவர் சாணமடிக்கும் திருவிழா ! ‘பகையை தீர்த்துக்கலாமோ ?’

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்அருகே  உள்ள தாளவாடி என்ற பகுதியில் உள்ளா கும்டாபுரம் என்ற கிராமத்தில்,  சாணத்தில் ஒருவரை ஒருவரை அடிக்கும் திருவிழா  நடக்கும். எனவே இந்த வருடமும் அது சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே  உள்ள தாளவாடி என்ற பகுதியில் உள்ளா கும்டாபுரம் என்ற கிராமத்தில், சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்த பிரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தீபாவளை பண்டிகை முடிந்த நான்காவது நாள் சாணமடிக்கும் திருவிழா   நடைபெறும். 
 
இந்நிலையில் இன்று சாமிக்கு பூஜை செய்யப்பட்டு காலையில் சிறப்புடன் விழா தொடங்கியது. இதில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.