திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2019 (16:22 IST)

சாமி சிலை உடைப்பு விவகாரம்: மர்ம நபர்களில் ஒருவர் கைது

ஈரோட்டில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தொப்பபாளையம் பகுதியில், காளியண்ணன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான குல தெய்வமாகும். நேற்று இரவு, அக்கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரண்டு சாமி சிலைகளையும் உடைத்துவிட்டு சென்றனர். 

இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் மூலம், மர்ம நபர்களை போலீஸார் தேடி வந்தனர். தற்போது இது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கோட்டைக்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.