புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ரூ.4 லட்சத்தை நெருங்கியது வெள்ளி விலை..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,20,200 என்ற வரலாற்றுச் சாதனை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 15,025 ஆக உள்ளது.
அதேபோல், முதலீட்டாளர்களால் விரும்பப்படும் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 16,391 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 1,31,128 ஆகவும் உயர்ந்துள்ளது.
தங்கம் மட்டுமல்லாது வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 375-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Edited by Siva