கணவரோடு சேர விடாத நபர் – வாலி அஜித் போல நிஜத்தில் ஒரு மனிதர் !

Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (09:55 IST)
ஈரோடு மாவட்டத்தில் தன்னிடம் பணிபுரிந்த பெண்ணை அவரது கணவரோடு வாழவிடாமல் தொல்லைக் கொடுத்துள்ளார் ஒரு நபர்.

ஈரோடு மாவட்டம் தொரயன்மலைப் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் தொண்டு நிறுவன அதிபர் தங்கமணி. தொண்டு நிறுவனம் என்பதால் இவருக்குப் பல பெண்களின் தொடர்பு கிடைத்துள்ளது. அதேப்போல தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள பெண் ஒருவரையும் இவருடன் சேர்ந்து பல பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண்ணின் மீது அவருக்கு ஆசைப் பிறந்துள்ளது. இதனால் அவர் மேல் பாசமாக இருப்பது போல நடித்துள்ளார். அந்த பெண்ணும் அதை நம்பியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்குப் பெற்றோர் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதனால் அவர் தன்னை விட்டுப் போய் விடுவாரோ என்ற அச்சத்தில் தங்கமணி அந்த கல்யாணத்தைத் தடுக்க பல வழிகளில் முயன்றுள்ளார். ஆனாலும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் அந்த பெண் மேல் உள்ள ஆசையால் அவர்க்குத் தினமும் தொலைபேசியில் அழைத்து நீண்ட நேரம் பெசியுள்ளார். இதனால் அந்த பெண்ணின் கணவர் கோபமாகி தனது மனைவியைக் கண்டித்துள்ளார். வாலி அஜித் போல் கணவன் மனைவியை சேர்ந்து வாழவிடாமல் தடுத்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்ற அவர் போன் செய்து அந்த பெண்ணைக் கீழே வரவழைத்துள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணை தனது காரில் கடத்தி செல்ல முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவன் வீட்டார் காரை மடக்கி  அவர்களைப் பிடித்து போலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :