செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (10:38 IST)

லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளை: மேலும் ஒருவர் சற்றுமுன் கைது!

திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கொள்ளை வழக்கில் ஏற்கனவே மூவர் கைது 
செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவதாக முரளி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த கொள்ளையின் முக்கிய குற்றவாளியும் ஏற்கனவே கைது செய்யப்பட்டவருமான முருகனின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது
 
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் தனிப்படையினர்களின் தேடுதல் வேட்டையில் ஏற்கனவே ஒரு மணிகண்டன், முருகன் ஆகிய இரண்டு கொள்ளையர்கள் பிடிபட்ட நிலையில் இவர்களிடம் செய்த விசாரணையின் அடிப்படையில் நேற்று சுரேஷ் என்ற கொள்ளையனும் சிக்கினான். இவர்கள் மூவரிடம் இருந்து 2 மூட்டைகளில் நகைகள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது நான்காவதாக முரளி என்ற கொள்ளையனும் சிக்கியுள்ளான். முரளி, முருகனின் அண்ணன் மகன் என்பதும் இந்த கொள்ளையில் முரளிக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த கொள்ளை விவகாரத்தில் மொத்தம் 8 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக சிசிடிவி கேமிரா மூலம் தெரிய வந்துள்ளதால் இன்னும் நான்கு பேர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தை பொருத்தவரை முதல் நபரை பிடிப்பதுதான் கஷ்டம் என்பதும் அதன்பின்னர் பிடிபட்டவர்களிடம் இருந்து பெறும் தகவல்களை வைத்தே மற்றவர்களை எளிதில் பிடித்துவிடலாம் என்பதால் மீதியுள்ள நால்வரும் வெகுவிரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது