செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 அக்டோபர் 2019 (08:43 IST)

மனாசா வினாவா... தயாரிப்பாளர், கொடை வள்ளல், திருடன்: பல பறிமானங்களில் முருகன்!

லலிதா ஜுவல்லரி திருட்டிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த முருகன் தயாரிப்பாளராகவும் கொடை வள்ளலாகவும் இருந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

 
திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சி அருகில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர்ம் கரூர் போன்ற பகுதிகளிலும் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது.
 
இந்நிலையில் திருவாரூர் விளமல் பாலம் வழியாக இரண்டு பேர்  சென்று கொண்டிருந்திருக்கின்றனர். அங்கு போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருப்பதை கண்ட அவர்கள் மூட்டையை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோட முயன்றிருக்கிறார்கள். துரத்தி சென்ற போலீஸார் மணிகண்டன் என்பவரை பிடித்தனர். அவனுடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் தப்பி தலைமறைவானான். 
அவர்களிடமிருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் பிரபல கொள்ளையன் முருகனின் ஆட்கள் என்பது தெரிய வந்தது. அதன் பின்னர் முருகன் குறித்த பின்கதைகள் பல வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 
 
முருகன் சுவரின் கன்னம் வைத்து திருடுவதில் பலே கில்லாடியாம். கர்நாடக மாநிலத்தில் மட்டும் முருகன் மீது 180 வழக்குகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு கர்நாடக சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான முருகன் பெங்களூருவில் இருந்து ஐதராபாத் போய் தன் திருட்டை தொடர்ந்திருக்கிறான். ஐதராபாத்தில் இதுவரை போலீஸில் சிக்கவில்லை. 
முருகன் தனது சொந்த ஊர் மக்களுக்கு அரிசி, பருப்பு முதல் வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் என தான தர்மம் செய்துள்ளானாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் இருவரை தத்து எடுத்து வளர்த்து வருவதாகவும், மாற்று திறனாளிகளுக்காக ஒரு காப்பகம் ஆரம்பித்த தாகவும் ஆனால் அந்த காப்பதற்கு சீல் வைக்கப்பட்டது எனவும் ஊர் மக்கள் தகவ்ல் கொடுக்கின்றனர். 
 
இதைவிட முக்கியமானது என்னவெனில், முருகன் ரூ.50 லட்ச முதலீட்டில் பாலமுருகன் புரடெக்சன் என்ற பெயரில் மனாசா வினாவா என்ற தெலுங்கு படத்தை தயாரித்துள்ளானா. ஆனால், இந்த படம் இன்னும் வெளியாகவில்லையாம். 
 
தற்போது முருகன் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், எனவே போலீஸாரிடம் சிக்காமல் இருக்க மருத்துவ வசதிகள் கொண்ட வேனில் ஊர் ஊராக சுற்றி வருவதாகவும் தக்வல் தெரிந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.