வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (07:00 IST)

லலிதா ஜூவல்லரி கொள்ளை: சத்தம் வராமல் சுவற்றில் ஓட்டை போட்டது எப்படி?

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டதில் இன்னும் சில கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
குறிப்பாக ஜூவல்லரியின் சுவரை உடைக்கும்போது சத்தம் வராமல் இருக்க என்ன காரணம் என்ற உண்மை விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுவரை உடைக்கும் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க, கடப்பாரை கம்பியில் ஈரமான கோணிப்பையை சுற்றி உடைத்ததாகவும், இது பழங்காலத்தில் திருடர்கள் பயன்படுத்திய வழிகளில் ஒன்று என்றும் கூறப்படுகிறது
 
சுவற்றில் துளை போட முனைப் பகுதியை தவிர மற்ற பகுதியை ஈரச்சாக்கினால் சுற்றி கொண்டு கடப்பாரையின் முனை மீது சுத்தியலால் மெல்ல மெல்ல அடித்து துளையிட்டதாகவும், இந்த முறையில் துளையிட்டதால் துணி துவைப்பது போன்ற சத்தமே வரும் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது
 
மேலும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் எளிதில் சிக்க சிசிடிவி கேமிராவும் ஒரு காரணம் என்கின்றனர் போலீசார். அதுமட்டுமின்றி கொள்ளை போக இன்னும் ஒரு காரணம் லலிதா ஜூவல்லரியின் மெத்தன போக்கு என்றும், அலாரம் சென்சார் உள்ளிட்ட வசதிகள் இந்த கடையில் இல்லை என்றும், அதுமட்டுமின்றி இந்த கடைக்கு போடப்பட்டிருந்த மூன்று காவலாளிகள் கொள்ளை நடந்தபோது தூங்கிக்கொண்டிருந்தனர் என்பதும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது