திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (19:22 IST)

குரூப் 2 முறைக்கேடு; மேலும் ஒருவர் கைது

கோப்புப்படம்

குரூப் 2 முறைக்கேட்டில் மேலும் ஒரு கைது செய்யப்பட்டுள்ளார்.

குரூப் 2 ஏ தேர்வு முறைக்கேடு தொடர்பாக தீபக், வினோத் குமார், அருண்பாலாஜி, தேவி உட்பட இதுவரை 14 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் தேர்வில் வெற்றி பெற ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரியவந்தது.

இந்நிலையில் குரூப் 2 ஏ முறைக்கேட்டில் கார்த்திக் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளது. இவர் எழிலகத்தில் வணிகத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர் என தெரியவருகிறது.