வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (08:09 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 28வது நபராக டெல்லியில் ஒரு ரவுடி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டதாகவும், கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கைதானவர்களின் சொத்துக்களை முழுமையாக பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தேடப்பட்ட ரவுடி புதூர் அப்பு என்பவர் டெல்லியில் பதுங்கி இருந்ததாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, டெல்லிக்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அனைத்து வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva