ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: திருப்பூரில் அவலநிலை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டிருந்தாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதும் தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக பாதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திருப்பூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் நிலை பெரும் சிக்கலில் உள்ளது. திருப்பூரில் உள்ள குமரன் நகர் என்ற பகுதியில் உள்ள கொரோனா மையத்தில் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை செய்யும் அவல நிலை இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மேலும் ஆக்சிஜனுக்காக காத்திருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு எப்போது படுக்கைகள் கிடைக்கும் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் திருப்பூரில் ஆக்சிஜன் கருவியை இயக்க பணியாளர்கள் இல்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.