வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 1 ஏப்ரல் 2023 (16:31 IST)

சென்னை ஓஎம்ஆர் - இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு: நெடுஞ்சாலைத் துறை தகவல்..!

சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் ஆகிய 2 சாலைகள் என்பதும் இந்த இரண்டு சாலைகளுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இரண்டு சாலைகளையும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து இணைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. 
 
முதல் கட்டமாக ஓஎம்ஆர் ஈசிஆர் சாலைகளை நீலாங்கரையில் இணைக்கும் பணி ரூபாய் 18 கோடியில் முடிக்கப்பட்டு இருப்பதாகவும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் - இசிஆர் சாலையை இணைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மூலம் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே மேம்பாலம் அமைக்க விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இந்த மேம்பாலம் தயாரானால் இரு சாலைகளும் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran