1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Omni bus services to be stopped in 7 districts

அரசு பேருந்தை தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்!

Cyclone Nivar
ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து சங்கம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி சற்று முன்னர் புயலாக உருவாகி தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. நிவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று தெரிகிறது. 
 
நிவர் புயல் காரணமாக வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு இடையேயான சேவை முழுவதுமான ரத்து செய்யப்பட்டுகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து தற்போது நிவர் புயலின் தாக்கத்தை சந்திக்கவுள்ள புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து சங்கம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
நிவர் புயல் காரணமாக மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைப்பு!