வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:59 IST)

நிவர் புயல் காரணமாக மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைப்பு!

நிவர் புயல் காரணமாக மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைப்பு!
இன்று கரையைக் கடக்கும் நிவர் புயல் காரணமாக மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது. இந்த கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு டிசம்பர் 4 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இப்போது நிவர் புயல் காரணமாக தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் கலந்தாய்வு 30 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.