தென் தமிழகத்திற்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்துகள் சங்கம்..!
நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை தென் தமிழகத்திற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து ஆம்னி பேருந்துகள் அங்கிருந்துதான் கிளம்பி வரும் நிலையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் இயக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
இதனை அடுத்து ஈசிஆர் வழியாக புதுவை பூந்தமல்லி சாலை வழியாக பெங்களூரு செல்லும் வாகனங்கள் மட்டும் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் 20% மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் ஏற்றி சொல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் பேருந்து நிலையம் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Edited by Siva