தமிழ்நாடு காய்கறி சந்தைகளில் வெங்காயத்தில் விலை உயர்வை தொடர்ந்து பூண்டின் விலையும் உயர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டின் சந்தைகளுக்கு நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வந்தாலும், தேவையை ஈடு செய்வதற்காக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூண்டு இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஆனால் கடந்த சில வாரங்களாக மேற்படி மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து குறையத் தொடங்கியுள்ளதால் விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு மொத்த விற்பனையில் அதிகபட்சமாக ரூ.400 வரை விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் ரூ.500 வரை தொட்டுள்ளது.
தொடர்ந்து பூண்டின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு அறுவடை ஜனவரி மாதத்தில்தான் நடைபெறும் என்பதால் அடுத்த சில வாரங்களுக்கு விலை உயர்வு இருக்கும் என்றும், பின்னர் படிப்படியாக வரத்து அதிகரித்து விலை குறையும் என்றும் கூறப்படுகிறது.
Edit by Prasanth.K