திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 நவம்பர் 2024 (07:29 IST)

தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Rain
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணமாக இன்று முதல் 10ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும், குறிப்பாக நவம்பர் 8ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுமை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வட தமிழக கடலோர பகுதியில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Edited by Siva