திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (11:17 IST)

விரைவில் உதயநிதி அமைச்சராக வேண்டும்! – ஆதரவு களத்தில் அடுத்த அமைச்சர்!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என பலரும் கூறிவரும் நிலையில் மேலும் சில அமைச்சர்களும் அதுகுறித்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்தார். பின்னர் கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக இயங்க தொடங்கிய அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் ஆனார் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சரவையில் உதயநிதிக்கு துறை ஒதுக்கப்படலாம் என அப்போதைய சமயம் பேசிக் கொள்ளப்பட்ட நிலையில் அப்படியாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் சமீபமாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் உதயநிதி அமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து அன்பில் மகேஷ், கே.என்.நேருவை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர் “முதலமைச்சர் போலவே உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார். வெகு விரைவில் உதயநிதி அமைச்சராக வர வேண்டும், அவரது பணி மாநிலம் முழுவதும் தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.