உயிருடன் குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்பட்ட முதியவர்… சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

Last Updated: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:56 IST)

உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரோடு இருந்த அண்ணன் இறந்து விட்டதாக கருதி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தம்பியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
.சேலத்தில் உள்ள சரவணன் என்பவருக்கு எழுபது வயதாகிறது. இவர் உடல்நலமின்றி சாகும் தருவாயில் இருந்ததால், இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என்று கருதி அவரது தம்பி குளிர்சாதனப் பெட்டியை வரவழைத்தார். அதன்பின் அவரது அவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தும் விட்டார். ஆனால் அவர் அதில் உயிருடனேயே இருந்துள்ளார். இதைப்பற்றி அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைய முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :