1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 14 அக்டோபர் 2020 (07:24 IST)

உயிரோடு இருக்கும் அண்ணனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தம்பி: அதிர்ச்சி தகவல்

உயிரோடு இருக்கும் அண்ணனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தம்பி
உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரோடு இருந்த அண்ணன் இறந்து விட்டதாக கருதி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தம்பியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சேலத்தில் உள்ள சரவணன் என்பவருக்கு எழுபது வயதாகிறது. இவர் உடல்நலமின்றி சாகும் தருவாயில் இருந்ததால், இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என்று கருதி அவரது தம்பி குளிர்சாதனப் பெட்டியை வரவழைத்தார். அதன்பின் அவரது அவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தம்பி, சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் என நினைத்தார்
 
ஆனால் பல மணி நேரம் ஆகியும் சரவணன் உயிர் பிரியவில்லை. சிலமணி நேரம் கழித்து திரும்பி வந்த குளிர்சாதனப் பெட்டியை எடுத்து வந்த தொழிலாளர்கள் சரவணன் உயிரோடு குளிர்சாதன பெட்டியில் வைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
 
இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து சரவணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அவரது தம்பியுடன் விசாரணை செய்தபோது அவர் இறக்கும் தருவாயில் இருந்ததால் உயிர் சீக்கிரம் பிரிந்துவிடும் என கருதி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளதாக அப்பாவியாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது