திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (15:59 IST)

ஒரே மகன் சொத்தை பறித்து கொண்டான், தற்கொலைக்கு அனுமதி தாருங்கள்: வயதான தம்பதி மனு..!

தங்களுடைய சொத்துக்களை ஒரே மகன் பறித்து கொண்டதாகவும் இதனால் வாழ வழி இன்றி இருக்கும் தங்களுக்கு தற்கொலை செய்து கொள்ள அனுமதி தருமாறு வயதான தம்பதிகள் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் மேரி தம்பதிகளுக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் தங்களது ஒரே மகன்  பெற்றோர்களை அடித்து துன்புறுத்தி சொத்துக்களை பறிமுதல் செய்து விட்டதாகவும் இதனால் தங்களுக்கு வாழ வழி இல்லாததால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்,.

தங்களது உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாகவும் தங்களது வீடு ஆவணங்கள் தங்க நகைகள் ரொக்கப்பணம் அனைத்தையும் தங்களது மகன் பறித்துக் கொண்டதாகவும் எனவே முதல்வரின் தனிப்பிரிவு உட்பட அனைத்து அதிகாரிக்கு புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் எனவே நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் கோட்டாட்சியர் உடனடியாக அவரது மகனிடம் விசாரணை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran