1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (13:21 IST)

முதலிரவில் மணப்பெண்ணின் வயிற்றை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன்.. நீதிமன்றத்தில் வழக்கு..!

சமீபத்தில் திருமணம் ஆன இளைஞர் முதலிரவில் தனது மனைவியின் வயிற்றில் பல தையல்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த விவகாரம் பெரிதாகி தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அளவிற்கு சென்றுள்ளது. 
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இருவரும் முதலிரவு அறைக்கு சென்ற நிலையில் பெண்ணின் வயிற்றில் தையல் போட்டிருந்ததை பார்த்து மணமகன் அதிர்ச்சி அடைந்தார் 
 
மணமகளிடம் இதுகுறித்து அவர் கேட்டபோது கீழே விழுந்து விட்டதால் ஏற்பட்ட காயம் காரணமாக தையல் போடப்பட்டது என்றும் கூறி மழுப்பினார். ஆனால் சந்தேகம் தீராத மணமகன், மேலும் மேலும் கேள்விகள் கேட்க ஒரு கட்டத்தில் தான் ஒருவரை காதலித்து கர்ப்பமானதாகவும் கர்ப்பத்தை கலைத்த போது ஏற்பட்ட அறுவை சிகிச்சியின்போது தையல் போடப்பட்டதாகவும் கூறினார்
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில் மணமகன் மீது தற்போது மணமகள் வீட்டார் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
 
Edited by Mahendran