1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (17:56 IST)

40 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைய திட்டமா? அஜித்பவார் விளக்கம்

ajith pawar
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மருமகன் அஜித்பவார் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார். இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சியின் முன்னாள் தலைவர் இவர். கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்போது அக்கட்சியுடன் நட்பு பாராட்டி வந்தது.

இந்த நிலையில், மாராட்டிய மாநிலத்தில் தற்போது சிவசேனா( எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சரத்பவாரின்  மருமகனும்,  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கட்சியின் தலைவருமான அஜித்பவார் பாஜவுடன் கூட்டணி வைத்து,  மாராட்டிய மாநில முதல்வராகும் முயற்சியிலுள்ளதாக தகவல் வெளியானது.

அஜித்பவாருடன் 40 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணையவுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் வெளியான நிலையில், இதுபற்றி  அஜித்பவார் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை விட்டு விலகப்போவதாக வெளியான தகவல் அனைத்தும் வதந்தி. இதுபோன்ற வதந்திகளை நிறுத்த  வேண்டும். சரத்பவார் தலைமையில் இக்கட்சி உருவாக்கப்பட்டு ஆளுங்கட்சியாக இருந்துதாக குறிப்பிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.