செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (17:23 IST)

ஓபிஎஸ் சகோதரர் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் ஓ.ராஜா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அவர் அதிமுகவில் சேர்த்து கொள்ளப்பட்டார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.

ஓ.ராஜா அவர்கள் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் மீண்டும்  அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.