வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (19:46 IST)

இளையராஜா மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கிய படம் 'புலி. இந்த படத்தை விஜய்யின் பி.ஆர்.ஓ மற்றும் தயாரிப்பாளருமான பி.டி.செல்வராஜன் தயாரித்திருந்தார். இந்த படமும், இந்த படத்தை அடுத்து இவர் தயாரித்த இன்னொரு படமான 'போக்கிரி ராஜா' படமும் படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு ஒன்று இளையராஜா மீது இன்று மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

தனது பாடல்களை இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடுபவர்கள் தனக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ள இளையராஜா, அந்த ராயல்டியில் 50% தயாரிப்பாளருக்கு முறையாக தரவில்லை என்றும், பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாக தயாரிப்பாளர்களுக்கு தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது