திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஜூலை 2021 (15:58 IST)

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்: ஓபிஎஸ் அறிக்கை

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
இந்த அறிக்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு இழப்பீடு அளிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்வதும் கொரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடைவதை கண்காணிப்பதும் தமிழக அரசின் கடமை என்று கூறியுள்ளார்
 
எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தினால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்