திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (22:11 IST)

கொரோனாவால் 798 மருத்துவர்கள் பலி !

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
 

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரொனா 2 வது அலையில் 798 மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து மருத்துவர் சங்கம் கூறியுள்ளதாவது:

கடந்த ஆண்டு நாடு முதல் அலை பரவியபோது, 748  மருத்துவர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மக்களைக் காப்பாற்ற இரவு பகலாகப் போராடி வரும் மருத்துவர்கள் இந்த கொரொனா இரண்டாம்  அலையின்போது இதுவரை 798 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.