வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (10:10 IST)

நீச்சல் தெரியாத குழந்தைகள் கிணற்றில் இறங்கி உயிரிழப்பு!

விக்கிரவாண்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமார் மற்றும் சங்கரி தம்பதியினர்.  இவர்களுக்கு தினேஷ் மற்றும் சத்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சங்கரியின் தாய் இறந்துவிட அவருக்கு இறுதிமரியாதை செய்ய குடும்பத்தோடு ஆசுர் என்ற கிராமத்துக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து குழந்தைகள் இருவரும் அந்த ஊர் சிறுவர்களோடு சேர்ந்து கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். ஆனால் அந்த இரு குழந்தைகளுக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கியுள்ளனர். இதைப்பார்த்த மற்ற சிறுவர்கள் அருகில் இருந்த இளைஞர்களை உதவிக்கு அழைக்க அவர்கள் குழந்தைகளை தூக்கி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் இருவருமே அதற்குள் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவமானது அந்த கிராமத்தில் பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.