1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (10:43 IST)

எம்ஜிஆரின் அடையாளமான புரட்சித்தலைவரை நீக்குவதா? - ஓபிஎஸ் கண்டனம்!

டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என குறிப்பிட்டிருந்தது தொடர்பாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான சுரங்க நடைபாதை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சுரங்க நடைபாதையை திறந்து வைத்தார். 
 
இந்நிலையில் இந்த விழாவின் விளம்பரத்தில் புரட்சித்தலைவர் என்ற அடைமொழியை விடுத்து வெறும் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என குறிப்பிட்டிருந்தது தொடர்பாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 
 
சென்னை மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதை திறந்து வைப்பது தொடர்பான விளம்பரம் முக்கியமான நாளிதழ்களில் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
 
ஆனால் இதற்கு புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம், சென்னை என்று பெயர். புரட்சி தலைவர் என்ற சொற்கள் விளம்பரத்தில் விடுப்பட்டு இருப்பது திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு. இது புரட்சி தலைவரை அவமானப்படுத்தப்பட்டதற்கு சமம். இதனை அதிமுக வண்மையாக கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.