செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (19:04 IST)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எம்.ஜி.ஆர் சிலை: தம்பிதுரை எம்பி கோரிக்கை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எம்ஜிஆர் சிலை வைக்க வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 
 
எம்ஜிஆர் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்டியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என கூறிய தம்பிதுரை எம்பி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலை அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் 
 
இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு பதிலளித்துள்ள நிலைஇயில் விரைவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எம்ஜிஆர் சிலை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது