1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. o panneerselvam ill, doctors treatment

ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுரை..!

ஓ பன்னீர்செல்வம்
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேற்று நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி என்ற பகுதியில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார்.

நேற்று காலை பத்து மணிக்கு ஓபிஎஸ் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளம்பிய போது திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் ஓட்டல் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது உடனடியாக மருத்துவர் அழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஓ பன்னீர் செல்வம் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ பன்னீர்செல்வம் நேற்று கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஹோட்டல் அறையில் முழு ஓய்வு எடுத்ததாகவும் நிர்வாகிகள் கூட்டம் இன்னொரு நாள் நடைபெறும் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு