1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (11:18 IST)

நடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டுமா..? – நீதிமன்றம் உத்தரவு!

Vijay
நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் வரி செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதை குறைக்க வேண்டி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் கடுமையாக பேசி இருந்தது ஒரு பக்கம் சர்ச்சையான நிலையில் வரி பாக்கி செலுத்த கால தாமதம் செய்ததாக அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடிய விஜய் தரப்பு ஏற்கனவே முழு வரியையும் செலுத்தி விட்டதாக கூறியிருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் காருக்கான வரியை 2019க்கு முன்பே செலுத்தி இருந்தால் அபராதம் கட்ட தேவையில்லை என்றும், 2019க்கு பிறகு நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காத பட்சத்தில் வணிக வரித்துறை அபராதம் விதிக்கலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.