வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (17:11 IST)

முறிந்ததா பாஜக கூட்டணி? ஓபிஎஸ் தலைய சுற்றி மூக்கை தொட்ட மொமெண்ட்!

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா? பாஜகவிடம் ஆதரவு கேட்பீர்களா என கேட்டதற்கு ஓபிஎஸ் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். 
 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக மற்றும்  நாம் தமிழர் கட்சிகள் தயாராகி வருகின்றன. 
 
மூன்று கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக, பாமக, சரத்குமார் கட்சி போன்ற கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது.
ஆனால், அதிமுக கூட்டணியில் முக்கிய இடம் பெற்றுள்ள கட்சியான பாஜகவிடம் இதுவரை அதிமுக தலைவர்கள் ஆதரவு கேட்கவில்லை. இனிமேலும் ஆதரவு கேட்பார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா? பாஜகவிடம் ஆதரவு கேட்பீர்களா ஓபிஎஸ் இடம் கேட்கப்பட்டது. 
 
இதற்கு அவர், எங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளின் ஆதரவை கேட்டிருக்கிறோம். அவர்கள் உறுதியாக எங்களுக்கு ஆதரவு தருவார்கள். எனவே இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெல்லும் என தெரிவித்துள்ளார். பாஜகவை குறித்து எதுவும் பேசவில்லை. 
தமிழகத்தை பொருத்தவரை பாஜக உடன் கூட்டணி என்றாலே தோல்வி உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அக்கட்சியிடம் இருந்து ஒதுங்கியிருக்க அதிமுக தலைவர்கள் விரும்புவதாக தெரிகிறது. புதுவையிலும் பாஜக தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.