புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (16:33 IST)

உதயநிதியை டார்கெட் செய்து பேசினாரா விஜய்? ராஜன் செல்லப்பா டிவிஸ்ட்!

நடிகர் விஜய் உதயநிதியை குறிப்பிட்டே இடை வெளியீட்டு விழாவில் பேசியதாக அதிமுகவில் சர்ச்சையை கிளப்பிய ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். 
 
ராஜன் செல்லப்பாவை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. காரணம் இவர் அதிமுகவில் ஒற்றை தலைமை இருந்தால் நன்றாக இருக்கும் என பேசி கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியவர். இந்நிலையில் இவர் நடிகர் விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழா பேச்சு குறித்து பேசியுள்ளார். 
 
ஆம், விஜய் எவன எங்க உட்கார வெக்கனுமோ அவன அங்க உட்கார வெச்சா எல்லாம் நல்லா இருக்கும் என கூறியது உதயநித்யை என இவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தது விரிவாக பின்வருமாறு, 
நடிகர் விஜய் முதல்வரை குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை என நினைக்கிறேன். காரணம் முதல்வரை குறித்து அப்படி பேசி இருந்தால் 50 நாட்கள் ஓட வேண்டிய படம் 25 நாட்கள்தான் ஓடும். 
 
அப்படி இல்லாமல் ஒரு வேளை மோடியை குறிப்பிட்டு விஜய் பேசியிருந்தால் அவருக்கு ஆபத்து காத்திருக்கிறது. ஆனால், எனது கணிப்பின்படி, விஜய் உதயநிதியை மனதில் வைத்துதான் பேசியிருக்க வேண்டும். 
 
உதயநிதிக்கு சமீபத்தில் திமுகவில் இளைஞர் அணி செயளாலர் பொறுப்பு வழங்கியதை விமர்சித்துதான் மறைமுகமாக இப்படி பேசியிருப்பார் என கூறியுள்ளார்.