திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (17:44 IST)

’இந்தி மொழி’திட்டத்துக்கு ஆதரவளித்த பிரபல தயாரிப்பாளர் !

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா, இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் பருத்திவீரன் உள்பட பல்வேறு படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக உள்ளார்.
 
இந்நிலையில்,  இன்று, கோவை மாவட்டத்தில் பாஜக வானதி சீனிவாசனின், மக்கள் சேவை மையம் சார்பாக, குறும்பட போட்டி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ஞானவேல் ராஜா கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது : 
 
பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக அரசு இந்தி மொழியைத் திணிக்கவில்லை. மற்றோரு மொழியைத் தெரிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. இந்தி மொழி கற்றுக் கொள்வதை அரசியலாக்குகிறார்கள். பொது மொழி ஒன்று இருப்பது அவசியம். மத்திய  அரசி அறிவிக்கும் திட்டங்கள் 90% தமிழர்களுக்குத் தெரிவதில்லை. அதற்கு மொழியும் ஒரு காரணம். இந்தி மொழியை அனைவரும் கற்றால் நாமும்  கற்கும் நிலை வந்து விடுமோ என இந்தி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என்று ஒரு கும்பலால் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது.