1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. O Paneerselvam name missing in govt invitation

முற்றும் மோதல்? அரசு அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்!

சென்னை
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் இடம்பெறவில்லை. 
 
கடந்த சில மாதங்களாக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த பிரச்சனை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே இருந்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் உச்ச கட்டத்தை அடைந்தது.
 
இதனை அடுத்து அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அனேகமாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் முதல்வர் ஈபிஎஸ் துணை முதல்வர் ஓபிஎஸ் ஒருவர் மீது ஒருவர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அரசு சார்பில் வெளியான அழைப்பிதழ் ஒன்றில் துணை முதல்வர் ஓ.பனீர்செல்வம் பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மாநகராட்சி சார்பில் நாளை நடைபெற உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை துவங்கி வைக்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி தனியாட் பங்களிப்புடன் நடைபெறுகிறது. தனியார் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம்பெற்றுள்ளது. 
 
ஆனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் இடம்பெறவில்லை. இது தற்போது மேலும் சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
10 லட்ச மரணங்கள் - பாதிக்கப்பட்ட 10 நாடுகள்: இந்தியாவின் நிலை என்ன?