செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (18:44 IST)

சென்னையில் முக்கிய பகுதிகளில் கனமழை! பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் தமிழகத்தில் இன்னும் சில நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் ஓடிவருகிறது. சென்னையில் முக்கிய பகுதிகளான் நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்றும் தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் திடீரென கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான வானிலை இருப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த மழை இன்னும் சில நாட்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சென்னையில் மழை பெய்து வருவதை அடுத்து #chennairain என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது