வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (14:25 IST)

நான் தினகரனை அழைத்தேனா...? டிவிட் போட்டு விளக்கிய ஓபிஎஸ்!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது சமீபத்திய பேட்டியில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
 
அப்போது, இதனை தினகரனுக்கான அழைப்பாக எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டதற்கு, இது அனைவருக்கும் பொருந்தும் என தெரிவித்தார். ஆனால் இப்போது இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது பின்வருமாறு, டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல்.
 
18 MLAக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.