மத்திய அமைச்சரை திடீரென சந்தித்த திவாகரன் மகன்: காரணம் என்ன?

Last Modified வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (22:53 IST)
அதிமுக-பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சரும் லோக்சபா தேர்தலுக்கான தமிழக பாஜகவின் பொறுப்பாளராகவும் உள்ள பியுஷ் கோயல் அவர்களை திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் இன்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. டிடிவி தினகரனுக்கு போட்டியாக திவாகரன்
தனிக்கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவருடைய மகன் மத்திய அமைச்சரை சந்தித்துள்ளது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு அதிமுக மெகா கூட்டணியை அமைத்து கொண்டிருக்கும் நிலையில் திவாகரன் மகன் மத்திய அமைச்சரை சந்தித்திருப்பதால் இந்த கூட்டணியில் மாற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுமை காப்போம்


இதில் மேலும் படிக்கவும் :