அனைத்து வேட்பாளர்களும் ஒரே மேடையில்..! – சீமானின் பிரம்மாண்ட அறிவிப்பு!

Prasanth Karthick| Last Modified திங்கள், 1 மார்ச் 2021 (13:04 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒரே மேடையில் அறிவிக்க உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு பெறுதல் கலந்தாலோசனை உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றன. ஆனால் இவை எதுவும் இல்லாமல் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது நாம் தமிழர் கட்சி.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் மார்ச் 7ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 234 தொகுதிகளுக்குமான அனைத்து வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :