திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (10:19 IST)

கன்னியாக்குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்! – காங்கிரஸ் விருப்ப மனு விநியோகம்!

தமிழகத்தின் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவால் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதால் கன்னியாக்குமரி கவன் பெறும் மாவட்டமாக உள்ளது.

இந்நிலையில் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 1 முதல் 5 வரை காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.