திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (10:30 IST)

10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வை ரெடி; திருச்சி பொதுக்கூட்டத்தில் ரிலீஸ்! – மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தை முன்னேற்றுவதற்கான திட்டத்தை தயாரித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி ஏப்ரல் 6ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அப்போது அவர் “எதிர்வரும் மார்ச் 7ல் திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகம் பல்வேறு துறைகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள், பல்வேறு பிரதிநிதிகள், மக்களின் கருத்துகள் கேட்டல் ஆகியவற்றை கொண்டு தொலைநோக்கு பார்வையில் சில திட்டங்கள் பட்டியலிட்டுள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல உள்ள திமுகவின் தொலைநோக்கு திட்டங்களை திருச்சி பொதுகூட்டத்தில் அறிவிக்க உள்ளேன். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.