வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By

தீபாவளி தினத்தன்று கங்கா ஸ்தானம் சிறப்புகள்....!

நரகாசுரன் அழிந்த நாள் ஐப்பசி மாத தேய்பிறைகாலம், அதாவது அபரபட்சத்து திரயோதசி என்னும்  பதின்மூன்றாம் திதிநாள் பின்னிரவாகும். பதினான்காம் திதி நாளான சதர்த்தசி தீபாவளி திருநாளாக அமைகிறது.
அன்றைய தினம் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்து நீராடுவதன் மூலம் தீபாவளி செயற்பாடுகள் ஆரம்பமாகின்றன. இந்த நாளிலே செய்யப்படும் பூசைகளும் புண்ணிய கருமங்களும் ஆன்மாக்களை  நரகத்தினின்றும் காத்தலால். இது நரக சதுர்த்தகி எனப்படுகிறது. ஸ்நானத்துக்குரிய எண்ணெய் லட்சுமியாகவும், தண்ணீர் கங்காதேவியாகவும் கருதப்படுவதாக சமய அறிஞர்களால் சொல்லப்பட்டுள்ளது.
 
தீபாவளி தினத்தன்று நீராடுவதை “கங்கா ஸ்தானம்” என்று சொல்வார்கள். பெரும்பாலும் இந்நாளிலே  ஒருவரையொருவர் சந்திக்கும்போது “கங்கா ஸ்நானம் செய்தாகவிட்டதா?” என்று விசாரித்துக்கொள்வது வழக்கம் ஏனெனில் தீபாவளியன்று சகல நீர்நிலைகளிலும் கங்கை வருவதாக ஐதீகம். அன்றைய தினம்  எந்தவொரு இடத்தில் நீராடினாலும், கங்கை நதியில் நீராடிய பலனும் லட்சுமிதேவி கடாட்சமும் அனைவருக்கும்  கிடைக்கும் என சமய நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தீபாவளி என்பது (தீபம்+ஆவளி) தீபங்களின் வரிசை என்று பொருள்படும் இதனை தீபாவளி (தீபம்+ஆவலி) என்றும் நூல்களிலே சொல்லப்பட்டுள்ளது. ஆவளி, ஆவலி என்ற இரு பதங்களும் ஒரே கருத்தையே குறிக்கின்றன. வரிசையாக தீபங்களை ஏற்றிக்கொண்டாடுவதே தீபாவளிப் பண்டிகையின் சிறப்பாகும். புற ஒளி ஏற்றி உள் ஒளி  பெறுவதே தீபாவளியின் மகத்துவமாகும்.