வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:04 IST)

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு..! இடைத்தேர்தல் நடத்தப்படுமா.?

assembly
திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமான நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. 
 
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக புகழேந்தி இருந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் புகழேந்தி திடீரென மயக்கம் அடைந்தார். 

இதைத்தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 
வருகின்ற 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. போதிய கால அவகாசம் இல்லாததால் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகம்தான்.