1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (11:26 IST)

ஆன்லைன், ஆப் மூலம் டிக்கெட் பெற முடியாது: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

metro
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ஆன்லைன் மூலமும் ஆப் மூலமும் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் பெற முடியாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர் என்றும் கடந்த எட்டு ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 9 கோடிக்கும் அதிகமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலுக்கு ஆன்லைன் மூலமாகவும், ஆப் மூலமாகவும் டிக்கெட் பெற முடியும் என்ற வசதி கடந்து சில மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று பயணிகள் மெட்ரோ டிக்கெட்டுகளை நேரில் சென்று மட்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என்றும் அதுவரை பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva