புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (21:33 IST)

31- நிமிடம் 31- விநாடிகள் தொடர்ந்து சிலம்பத்தை சுழற்றி இளைஞர் சாதனை..

கரூரில் நடைபெற்ற சிலம்பாட்ட உலக சாதனை நிகழ்ச்சியில் சாதனையை நிகழ்த்திய அவினாஷ் என்கின்ற இளைஞருக்கு நோபல் உலக சாதனை அமைப்பு கேடயம்  வழங்கி  வாழ்த்து  தெரிவித்து கெளரவித்தது.
 

கரூரை அடுத்த புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் மாபெரும் நோபல் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அக்னிஅரசன் என்கின்ற அவினாஷ்  தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில் கரூர், திருச்சி ,சேலம், நாமக்கல், தஞ்சாவூர், தேனி ,ஈரோடு  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐந்து வயது முதல் 20 வயதுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து அரை மணி நேரம்' நான்கு வீடு' என்ற முறையிலான சிலம்பம் சுழற்றும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிலம்பம் அகாடமியை சேர்ந்த அவினாஷ் என்பவர் 31- நிமிடம் 31- விநாடிகள் தொடர்ந்து சிலம்பத்தை சுழற்றி நோபல் உலக முயற்சியை நிகழ்ச்சி காட்டினார்.

இந்த சாதனை நிகழ்ச்சியை முடித்த அவினாஷ் அவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை நோபல் உலகசாதனை அமைப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.