1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. No rain in tamilnadu this year

2018ம் ஆண்டு சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது - வெதர்மேன் தகவல்

Tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டது என வெதர்மேன் என அழைக்கப்படும் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை வருகிற டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது. இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள வெதர்மேன் “ இனிமேல் இந்த வருடம் தமிழகத்தில் மழை பெய்யாது.
 
இந்த ஆண்டு போதுமான பருவமழை பெய்தது. இதன் மூலம் சென்னையில் வருகிற 2018ம் ஆண்டு தண்ணீர் பிரச்சனை இருக்காது. ஆனால், அடுத்த மாதம் வரை கீழைக்காற்று தொடர்வதால லேசான மழை மட்டுமே பெய்யும். இதுதான் இந்த ஆண்டின் கடைசி மழை அறிக்கை” என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தினமும் படுக்கைக்கு 10 பெண்கள் ; காம களியாட்டம் நடத்திய சாமியார்