புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (20:01 IST)

ஊரடங்கில் மின்தடை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட தமிழக அரசு

ஊரடங்கில் மின் தடை இல்லை என்ற முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது 
 
திமுக ஆட்சி என்றாலே அனைவரும் பயப்படுவது மின்தடை தான். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த திமுக ஆட்சியில் தினமும் 10 மணிநேரம் 12 மணிநேரம் மின்தடை இருந்ததால் பொதுமக்களுக்கு அந்த பயம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது திமுக ஆட்சியிலும் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் சில மணி நேரம் மின்தடை இருந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு மின் தடை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முழு ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மின் தடை இல்லை என்றும் மின்தடைக்கு அனுமதி தருவது ஊரடங்கு முடியும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது
 
எனவே இனி பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு சில பகுதிகளில் மின்தடை மின் வாரியத்தால் செயற்படுவதற்கு முழு ஊரடங்கு காலம் முடியும் வரை அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது