ஊரடங்கால் பாதிப்பு; ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக உழவு! – வேளாண்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் ஊரடங்கால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை உழவை இலவசமாக செய்து தர வேளாண் துறை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கினால் சிறு விவசாயிகளும் விவசாயம் மேற்கொள்வதில் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக வேளாண் துறையும், டாபே டிராக்டர் நிறுவனமும் இணைந்து பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உழவர்களுக்கு கோடை கால உழவை இலவசமாக செய்து தர திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.