சென்னை வருகிறது 4.20 லட்சம் தடுப்பூசிகள்! தீர்ந்தது பிரச்சனை!
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால் வரும் 3ஆன் தேதியிலிருந்து 6 ஆம் தேதி வரை தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை 4.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருவதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
தமிழகத்துக்கு ஏற்கனவே மே மாதம் தர வேண்டிய தடுப்பூசிகளைக் மத்திய அரசு இன்னும் தரவில்லை என்றும், ஜூன் மாதத்திற்கு உரிய தடுப்பு ஊசிகளும் வரவில்லை என்றும் தமிழக அரசால் குற்றம் சாட்டப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகிய இருவரும் மாறிமாறி குற்றம்சாட்டியதையடுத்து மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது
அது மட்டுமின்றி தடுப்பூசி தராத மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் எதிராக டுவிட்டரில் ஹாஷ்டாக் ஒன்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இதனை அடுத்து சற்றுமுன் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி விட்டதாகவும் 4.2 லட்சம் தடுப்பு ஊசி இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சென்னைக்கு வர உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி பற்றாக்குறைப் பிரச்சனை இருந்ததாக கருதப்படுகிறது